ஜேர்மனி கிளப்பில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்

Report Print Basu in ஜேர்மனி
438Shares
438Shares
lankasrimarket.com

ஜேர்மனி கிளப்பில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Konstanz பகுதியில் உள்ள கிளப்பில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், உயிர் பலி ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து Konstanz பொலிசார் கூறியதாவது, அதிகாலை 4.30 மணிக்கு கிளப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவசர அழைப்பு வந்ததை அடுத்து பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

சிலர் தப்பி ஓடிவிட்டனர், மற்றவர்கள் மறைந்திருந்தனர். இனி எந்த ஆபத்தும் இல்லை என உறுதிபடுத்தப்பட்ட பின்னர், மறைந்திருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதால் எந்த தகவலையும் வெளியிட முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, வரை கிளப் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தாக்குதலை உறுதிப்படுத்தும் செய்யும் வகையில் கிளப்பின் பேஸ்புக் பக்கத்தில் கருப்பு புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

கிளப் காவலாளி மீது இயந்திர துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிர் பலி இருக்ககூடும் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்