உடன் பணிபுரியும் நபரின் புற்றுநோய் பாதித்த மகனுக்காக ஊழியர்கள் செய்த செயல்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் புற்றுநோய் பாதித்த சக ஊழியரின் மகனுக்காக ஊழியர்கள் அனைவரும் 3000 மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் ஹெசன் மாகாணத்தில் உள்ள Fronhausen பகுதியில் வசித்து வருபவர் Andreas Graf(36). சில வருடங்களுக்கு முன் இவரது மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டார்.

அதன்பின் தன் குழந்தை ஜூலியஸ், இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு Andreas அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இது குறித்து தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் மனிதவள மேலாளரிடம் தெரியப்படுத்திய நிலையில், ஊழியர்களுக்கு மேலாளர் தரப்பில் வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேலாளர் விடுத்த, இரண்டு வாரத்திற்கு ஒரு சராசரி ஊழியர் 5 மணி நேரம் கூடுதலாக பணியாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று நிறுவனத்தில் பணிபுரியும் 650 நபர்களும் ஏற்று பணியை முடித்துள்ளனர்.

இதனால் தனது வேலை காப்பாற்றப் பட்டிருப்பதாகவும், ஊழியர்கள் அனைவருக்கும் தாம் நன்றிகடன் பட்டிருப்பதாகவும் குறித்த நபர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபரின் மகன் தற்போது சிகிச்சை நிறைவடைந்து பள்ளிக்குச் செல்லும் நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்