சிறையில் திணறிய சசிகலா

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தூக்கமில்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நேற்று முன் தினம் அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலாவின் முதல் நாள் சிறைவாசம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், சிறையில் மற்ற பெண் கைதிகளுக்கு வழங்கப் படும் சீருடையான நீல நிற கறை கொண்ட‌ வெள்ளைப் புடவை சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டு சாப்பாடு சசிகலாவுக்கு மறுக்கப்பட்டுள்ளதால் சிறை உணவே அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் புளிச்சோறு, மதியம் கேழ்வரகு களியுடன், குழம்பு, மோர் ஆகியவை வழங்கப்பட்டது.

இரவு சப்பாத்தி சசிகலாவுக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், நள்ளிரவு வரை சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பேசிக் கொண்டிருந்ததாகவும், இரவு முழுவதும் சசிகலா சரியாக தூங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

நேற்று காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்த சசிகலா காபி குடித்துவிட்டு பின்னர் பத்திரிக்கைகள் படித்தார் என தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments