சசிகலா, தினகரன் ராஜினாமா: ஓபிஎஸ் அணி அதிரடி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

டி.டி.வி.தினகரன் ஒதுக்கப்பட்டுள்ளதாக என்று கூறுவது நாடகம் என்று தெரிவித்துள்ள பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

டிடிவி தினகரன் அண்மையில் அதிமுக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தான் வெளியேறினால் இரண்டாக பிளவுபட்டுள்ள கட்சிகள் ஒன்று சேருமானால், கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறுகையில், சசிகலா மற்றும் குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

தினகரனை ஒதுக்கி வைக்கிறோம் என்று சொன்னதால் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளோம். தினகரன் ஒதுங்கியதை வரவேற்கிறோம்.

ஆட்சியில் இருப்பவர்கள், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும். இதுதான் நாங்கள் வைக்கு கோரிக்கை. நாங்கள் முதல்வர் பதவியோ, பொதுச்செயலாளர் பதவியோ கேட்கவில்லை.

சசிகலா குடும்பத்தினார் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். சசிகலா குடும்பத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தங்களை அவமானப்படுத்தி விட்டு தற்போது பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றனர்.

சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30பேரும் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments