இப்போது பேசும் கமலுக்கு அப்போது தைரியம் இருந்ததா? தமிழிசை கேள்வி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

திரைப்பட நடிகரான கமல்ஹாசன் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கூறினார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து கூறுகையில், அ.தி.மு.க அரசின் மீது குறை சொல்ல ஜெயலலிதா இருக்கும் போது கமலுக்கு தைரியம் இருந்ததா எனவும் இப்போது மட்டும் ஏன் குறை சொல்கிறார்.

அவர் திரைப்படத்துறையில் கவனம் செலுத்த வேண்டும். திரைத்துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தால் போதும் என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல் கூறிய கருத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments