இப்படியும் மனிதர்களா? பறவைகள் நலனுக்காக பட்டாசுகள் வெடிக்காத கிராம மக்கள்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பறவைகள் நலனுக்காக அங்கு வாழும் மக்கள் பல வருடங்களாக பட்டாசுகள் வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இங்குள்ள வடமுக வெள்ளோடு கிராம எல்லைக்குள் வி.மேட்டுபாளையம் , செல்லப்பம்பாளையம், தச்சான்கரை வழி, புங்கம்பாடி, கட்டையகாடு மற்றும் செம்மாண்டம்பாளையம் கிராமங்கள் அமைந்துள்ளது.

இங்கு வாழும் மக்கள் தீபாவளி திருநாள் மட்டுமல்லாது ஊர்திருவிழாக்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை.

சரணாலயத்தில் உள்ள பறவைகளின் பாதுகாப்பு கருதி நாங்கள் எந்தவொரு நிகழ்வுகளிலும் பட்டாசுகள் வெடிப்பதில்லை என இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்