தன்னை சீண்டிய நபருக்கு நன்றி தெரிவித்த இளம்பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மும்பையில் இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியவனுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

இளம்பெண் ஒருவர் காலை 6.45 மணியளவில் வழக்கம் போல் உடற்பயிற்சி மையத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்த காரணத்தால் செல்லும் வழியில் ஓரிடத்தில் ஒதுங்கி நின்றுள்ளார்.

அந்த நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இப்பெண்ணின் அருகில் சென்று நின்றுள்ளார், இதனால் அவ்விடத்தை விட்டு நகர்ந்த இப்பெண்ணை பின்தொடர்ந்த அந்நபர், அப்பெண்ணின் பின்பகுதியை இரண்டுமுறை தட்டியுள்ளார்.

இதனை கண்டுகொள்ளாத அப்பெண், வேகமாக உடற்பயிற்சி மையத்துக்குள் சென்று, தனது பயிற்சியாளரின் உதவியுடன் அந்நபரை கண்டித்துள்ளார்.

இதன்பின்னர் உடற்பயிற்சி மையம் முடித்து வீட்டுக்கு திரும்பி இப்பெண், என்னை மசாஜ் செய்த அந்த ஆணுக்கு திருமணம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என மும்பை பொலிசின் பக்கத்திற்கு டுவிட் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணை தொடர்பு கொண்ட பொலிசார், இதுபோன்று சம்பவம் நடந்தால் எங்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது அந்த நபர் குறித்து விசாரணை நடத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்