அதிமுக-விலிருந்து விலகுகினார் பிரபல பாடகி அனிதா குப்புசாமி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரபல பாடகியும் பேச்சாளருமான அனிதா குப்புசாமி அதிமுக-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல கானா குப்புசாமியின் மனைவியான அனிதா குப்புசாமி, கடந்த 2013-ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.

அதன் பின் அதிமுக-வுக்காக பல்வேறு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டார். ஆனால் ஜெயலலிதா இறப்புக்கு பின் கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைமை பிடிக்காததால் அதிமுக-விலிருந்து விலகுவதாகவும், வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பேஸ்புக்கில், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிவிட்டேன் என்று அதிகாரபூர்வமாக பத்திரிகையில் அறிவித்துவிட்டேன், யாராவது திரித்துச் சொன்னால் நம்பாதீர்கள் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்