தமிழகத்தை உலுக்கிய வழக்கு! திருச்சி உஷா கர்ப்பிணி இல்லை: பிரேத பரிசோதனையில் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வலர் காமராஜால் எட்டி உதைக்கப்பட்டு மரணமடைந்த உஷா கர்ப்பிணி இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

திருச்சியில் கடந்த 7ம் திகதி, தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை,

போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தின்போது உஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என ராஜா கூற, இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, பின் பொலிசாரால் விரட்டப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மட்டுமின்றி ஆய்வாளர் காமராஜ் இடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சரவணன் தனது அறிக்கையை காவல் துறையினரிடம் அளித்துள்ளார்.

அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என திருச்சியை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரம் உஷா வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்