நாயின் கண்ணீர் வரவைக்கும் பாசம்! இறந்த கன்று குட்டியை எழுப்ப போராடும் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா
343Shares
343Shares
lankasrimarket.com

தமிழகத்தில் தன்னுடன் பழகி வந்த கன்றுக் குட்டி, கிணற்றில் விழுந்து இறந்ததால், அதை எழுப்புவதற்கு நாய் போராடிய காட்சி வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம் மண்ப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் தன்னுடன் நாய் மற்றும் மாடுகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அதில் நாய், கன்று ஒன்றிடம் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும், கன்று ஓடினால், நாய் ஓடுவது, நாய் ஓடினால் கன்று விரட்டுவடு போன்று விளையாடி வந்துள்ளது.

இந்நிலையில் இப்படி ஒரு கிணற்றின் அருகே இரண்டு விலங்குகளும் விளையாடிக் கொண்டிருந்த போது, கன்றானது, 20 அடி நீளம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

இதைக் கண்ட நாய் தொடர்ந்து குரைத்ததால், உடனடியாக சின்ன துரை விரைந்து பார்த்துள்ளார். எவ்வளவு முயன்ற போதும், கன்று குட்டியை கிணற்றிலிருந்து மீட்கமுடியாததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து கன்று குட்டியை மீட்டுள்ளனர்.

இருப்பினும் கன்று குட்டி இறந்துவிட்டதால், இதைக் கண்ட நாய் தன்னுடைய நண்பனை எழுப்ப முயற்சி செய்கிறது.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் குறித்த வீடியோ பார்ப்போரையும் கண்கலங்க வைக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்