அதிவேக பயண ஊடகமான ஹைப்பர்லூப் எப்போது அறிமுகமாகின்றது என்று தெரியுமா?

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com

குழாய் வழி பயண ஊடகமாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் தற்போது மாதிரி நிலையிலேயே காணப்படுகின்றது.

எனினும் சில நாடுகள் இதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இப் பயண முறையினை முதன் முறையாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக SpaceX நிறுவனம் போட்டி ஒன்றினை வைத்திருந்தது.

இதில் வெற்றி பெற்ற குழு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் மற்றும் பாரிஸ் நகரை இணைக்கும் ஹைப்பர்லூப் பாதையினை அமைக்கவுள்ளது.

Technical University of Delft (TU Delft) இனை சேர்ந்த குழு ஒன்றே இந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

இம் முறை சாத்தியப்படும்பட்சத்தில் மணிக்கு 1,126 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments