ஆணுறைக்குள் தங்க கட்டிகளை வைத்து விழுங்கிய நபர்

Report Print Deepthi Deepthi in மலேசியா
0Shares
0Shares
lankasri.com

மலேசியாவில் இருந்து ஆணுறைக்குள் வைத்து 7 தங்க கட்டிகளை விழுங்கி வந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து 3 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த முகமது சலீம் என்பவரை பொலிசார் சந்தேகத்தில் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தனது வயிற்றுக்குள் 7 தங்க கட்டிகள் இருப்பதாக கூறியுள்ளார்.

200 கிராம் எடையுள்ள மொத்தம் 7 தங்க கட்டிகளை ஆணுறைக்குள் போட்டு வாழைப்பழத்தில் வைத்து விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

விழுங்கிய கட்டிகளை வெளியில் எடுப்பதற்காக அதிகாரிகள் அவரை திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இனிமா (வயிற்றுக்போக்கு மாத்திரை) கொடுக்கப்பட்டது.

சுமார், 3 நாட்கள் கழித்து அவரது வயிற்றில் இருந்து தங்க கட்டிகள் எடுக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.

மருத்துவ சோதனைக்கு பின்னர் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்