புதிய நோக்கியா கைப்பேசிகள் அறிமுகமாகும் தினம் வெளியாகியது

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

நீண்ட கால இடைவெளிக்கு பின்பு நோக்கியா நிறுவனம் சொந்தமாக ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளது.

அதிலும் சம காலத்தில் பிரபல்யமாகியுள்ள அன்ரோயிட் இயங்குதளத்தினை உடைய கைப்பேசிகளை வடிவமைத்துள்ளது.

இதன் அடிப்படையில் Nokia 3, Nokia 5 மற்றும் Nokia 6 ஆகிய கைப்பேசிகளை இரண்டாம் காலாண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக டுவிட்டர் ஊடாக செய்தி வெளியிட்டுள்ளது நோக்கியா நிறுவனம்.

அத்துடன் ஜுன் மாதத்தின் இறுதிப்பகுதியில் உலக நாடுகள் எங்கிலும் அறிமுகம் செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பான சில தகவல்கள் ஏற்கணவே வெளியாகியிருந்தன.

இந்நிலையில் விலை தொடர்பான தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments