iPhone X கைப்பேசியின் புதிய பதிப்பு விரைவில்

Report Print Givitharan Givitharan in மொபைல்
138Shares
138Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் சென்ற வருடம் iPhone X எனும் புதிய ஐபோன் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

Face ID எனும் புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இக் கைப்பேசிக்கு சந்தையில் அதிக கேள்வி காணப்பட்டது.

இக் கைப்பேசியின் திரையானது 5.8 அங்குல அளவுடையதாக காணப்பட்டது.

இந்நிலையில் இவ் வருட இறுதியில் 6.1 அங்குல அளவுடைய LCD திரையினைக் கொண்ட iPhone X கைப்பேசியினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது செப்டெம்பர் மாதமளவில் இக் கைப்பேசி சந்தைக்கு வருகின்றது.

இதேவேளை கடந்த வருடம் அறிமுகம் செய்த iPhone X ஆனது 2018ம் ஆண்டின் முதலாவது காலண்டுப் பகுதியில் 18 மில்லியன் கைப்பேசிகள் வரை விற்பனையாகும் எனவும், இரண்டாவது காலாண்டுப் பகுதியில் 13 மில்லியன் வரை விற்பனையாகும் எனவும் ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்