வட கொரியா ஜனாதிபதியின் சொகுசு வாழ்க்கை: புகைப்படத்தை வெளியிட்ட அமெரிக்கா

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வடகொரியா ஜனாதிபதி தன்னுடைய சொகுசு மாளிகைகளில் ஒன்றில் தனது சுய தேவைக்காக விமான இறங்குதளத்தை(Helipad) கட்டியுள்ளது தொடர்பான செயற்கைகோள் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

தனது தந்தை கிம் ஜாங் இல்- ன் மறைவுக்கு பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்த கிம் ஜாங் இதுவரை 9 தனியார் விமான ஓடுபாதைகளை அந்நாட்டில் அமைத்துள்ளார்.

மேலும் இவருக்கு என்று தனியாக பல்வேறு சொகுசு மாளிகைகள் உள்ளன, இந்நிலையில் தென் பியாங்கோன் மாகாணத்தில் உள்ள தனது சொகுசு மாளிகையில் விமான இறங்கு தளம் ஒன்றினை கட்டியுள்ளார்.

இந்த விமான தளமானது இவருக்காக கட்டப்பட்டது கிடையாது, இவரது குடும்ப உறுப்பினர்களுக்காக கட்டியுள்ளார்.

அதாவது தனது குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு தங்கியிருக்கையில், இவர்களை பார்க்க வருபவர்கள் இந்த விமான இறங்கு தளத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செயற்கைகோள் புகைப்படதை கடந்த ஏப்ரல் 12 ஆம் அமெரிக்கா எடுத்துள்ளது.

வட கொரிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தவிதமான வேலைவாய்ப்பும், மூலதனமும் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், இப்படி தனிப்பட்ட முறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் வடகொரிய ஜனாதிபதியின் செயல் மிகவும் அபத்தமாக உள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments