3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கெய்ரோவில் இருந்து 700 கி.மி தொலைவில் உள்ள லக்ஸர் நகரத்தில் கி.மு 16-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த 'புதிய அரசவம்சம்' என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்லறையில் உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கல்லறையில், ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு மகன்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அந்தத் தாய் ஐம்பது வயதில் இறந்திருக்கலாம் என்றும் பாக்டீரியாக்களால் எலும்புகள் பாதிக்கப்படும் நோய் அவருக்கு இருந்ததாகவும் சோதனை முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

அவரது இரண்டு மகன்களும் முறையே இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருந்ததாகவும் அவர்களது உடல்கள் நல்ல நிலையில் பதப்படுத்தபட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எகிப்தின் அந்த காலகட்டத்தின் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்பட்ட அமுனுக்கு கல்லறையை அர்ப்பணித்த பொற்கொல்லர் அமீனம்ஹெட்டின் இந்த கல்லறை, டிரா அபுல் நாகா இடுகாட்டில் பல்வேறு விஷயங்களை இனி கண்டுபிடிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்