சிரிய இளம்பெண்களை £75 விலைக்கு வாங்கும் ரஷ்ய கூலிப்படைகள்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக போரிட்டு வரும் ரஷ்ய கூலிப்படைகள் அங்குள்ள இளம்பெண்களை 75 பவுண்டு தொகைக்கு வாங்கி பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட ஆளும் ஆசாத் அரசு ரஷ்ய கூலிப்படைகளை களமிறக்கியுள்ளது. குறித்த கூலிப்படைகள் உயிருடன் பிடிக்கப்படும் கிளர்ச்சியாளர்களை தலை துண்டித்து படுகொலை செய்வதற்கு தலா 13 பவுண்டு கட்டணமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement

மட்டுமின்றி அங்குள்ள இளம்பெண்களை ஆண்டுக்கு 75 பவுண்டு கட்டணத்தில் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சிரியாவில் கூலிப்படைகளை களமிறக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமான ரஷ்ய ராணுவத்தினரே போரிட்டு வருவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

குறித்த கூலிப்படைகளில் உள்ள உறுப்பினர்கள் இருவர் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியதன் பின்னரே இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிக்கப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே முன்னாள் ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

அதில், ரஷ்ய கூலிப்படைகள் சிரிய இளம்பெண்களை தலா 1500 பவுண்டு என விலைக்கு வாங்கியும், அல்லது ஆண்டுக்கு சுமார் 75 பவுண்டு விலையில் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக மாத ஊதியத்திற்காக போரிட்டுவரும் இதுபோன்ற கூலிப்படைகள் அதிகாரப்பூர்வ ராணுவத்தினர் போன்று கேளீக்கைகளில் ஈடுபட முடியாது என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான அதிகாரிகள் இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை விலைக்கு வாங்கியுள்ளதையும் அந்த ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ளார்.

கூலிப்படையாக செல்லும் வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்பத்திற்கு 39,000 பவுண்டு வழங்கப்படுவதாகவும், படுகாயமுற்றால் 11,700 பவுண்டு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய கூலிப்படைகளை அந்த நாட்டு அரசு சிரியாவில் மட்டுமல்ல, உக்ரேன் மற்றும் கிரிமியா பகுதிகளிலும் களமிறக்கி போரிட வைக்கின்றது.

இவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுதங்களுக்காக ரஷ்ய ராணுவ நிதியில் இருந்தே மறைமுகமாக அளிக்கப்படுவதாக தகவல் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்