அமெரிக்காவுடன் திடீர் பேச்சு வார்த்தையில் வடகொரியா: அதில் உள்ள ஆபத்துகள் டிரம்பிற்கு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வடகொரியா ஜனாதிபதியை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்களை தெரிந்து தான் டிரம்ப் இந்த பேச்சு வார்த்தைக்கு சம்மதித்ததாக மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ கூறியுள்ளார்.

தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்த வடகொரியா அதில் இருந்து நாங்கள் எப்போதும் பின் வாங்கப் போவதில்லை என்றும் இது எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் போர் வருவதற்கு கூட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில்தெ வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இரு நாட்டு பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவாது என்று உலகநாடுகள் மகிழ்ச்சியில் உள்ளன.

இதையடுத்து வடகொரியா பேச்சு வார்த்தைக்கு தயார் என்றவுடன் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உடனடியாக ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டதாகவும், இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் வட கொரிய தலைவரை சந்தித்ததில்லை, அதில் இருக்கும் ஆபத்துகள் தெரியாமல் டிரம்ப் இப்படி கூறிவிட்டார் என்று டிரம்ப் நிர்வாகத்தினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ, அதில் இருக்கும் ஆபத்துகளை எல்லாம் தெரிந்து தான் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருக்கும் சவாலை டிரம்பின் நிர்வாகம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வடகொரியா மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதார நடவடிக்கையின் காரணமாக கிம் ஜாங் உன்னிற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டதால், அதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வட கொரியா இந்த பேச்சுவார்த்தையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமோ என்ற அச்சம் இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் செனேட்டர் எலிசபத் வாரென் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்