வீட்டை சுத்தம் செய்த போது அதிர்ச்சி: பாட்டில்களில் தொப்புள் கொடியோடு இருந்த குழந்தைகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

பாட்டில்களில் தொப்புள் கொடியோடு குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடு ஒன்றை நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

அதன் பின் அந்த வீட்டை புதுப்பிப்பதற்கு வேலைகள் எல்லாம் நடந்துள்ளன. அப்போது அந்த வீட்டில் இருந்த மூன்று, நான்கு பாட்டில்களில் தொப்புள் கொடியோடு குழந்தைகள் அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி அவை கெட்டு போகமல் இருந்துள்ளதாகவும், அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இது குறித்து பொலிசாரிடம் கேட்ட போது அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்