பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிசில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு, 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரங்களை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று நடந்தது.

advertisement

2024ம் ஆண்டுக்கான போட்டியில் ஜேர்மனியின் ஹம்பெர்க், இத்தாலியின் ரோம், ஹங்கேரியின் புடாபெஸ்ட், பிரான்சின் பாரிஸ் ஆகிய நகரங்கள் விருப்பம் தெரிவித்தன.

ஆனால் பாரிசை தவிர மற்றவை நிதி நெருக்கடியை காரணம் காட்டி விலகிக் கொண்டதால் ஏகமனதாக பாரிஸ் தெரிவானது.

இதேபோன்று 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிசில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அதை கொண்டாடும் விதமாக ஈபிள் கோபுரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்