ஐபிஎல் ஏலத்தில் பிரீத்தி ஜிந்தாவுக்கு ஆலோசனை வழங்கிய பிரபல நடிகையின் மகள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com

ஐபிஎல் ஏலத்தின் போது நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தாவுக்கு, நடிகை ஜூகி சாவ்லாவின் மகள் ஜானவி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக, ஹிந்தி நடிகையான ஜூகி சாவ்லா உள்ளார். அவரின் மகள் ஜானவியும் அவருடன் இணை உரிமையாளராக இணைந்துள்ளார்.

17 வயதாகும் ஜானவி மேக்தா படிப்பில் முதல் மாணவி ஆவார். இவர் தொழிலதிபரான தனது தந்தையின் வழியில் செயல்பட வேண்டும் என்று எண்ணி, கொல்கத்தா அணியின் இணை உரிமையாளராக இணைந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது, பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு, வீரர்களை ஏலத்தில் எடுப்பது தொடர்பாக ஆலோசனையை ஜானவி வழங்கியுள்ளார்.

இது குறித்து பிரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ’ஐபிஎல் ஏலத்தில் அதிபுத்திசாலியான ஜானவி மேக்தாவை சந்தித்து, நமது பணத்திற்காக ஓட வேண்டும் என ஆலோசனை பெற்றது அற்புதமான தருணம்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜானவியின் தாய் ஜூகி சாவ்லா பதிலாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நீங்கள் மிகவும் அழகான, மகிழ்ச்சி நிறைந்தவர், ஜானவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்