மூட்டுக்களை பாதுகாக்கும் சக்தியை மீள் சுழற்சிக்குட்படுத்தக்கூடிய இலத்திரனியல் படிகள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

மாடிப்படிகளில் ஏறும்போது வயது முதிந்தவர்களுக்கும், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கும் சிரமமாகவே இருக்கும்.

இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய இலத்திரனியல் படிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை குறைந்த அளவு தாக்க அழுத்தத்தில் இயங்கக்கூடியனவாக உள்ளன.

இதில் விசேடமாக சுருள் வில் (Springs) மற்றும் அமுக்க சென்சார்கள் காணப்படுகின்றன, இதனை Georgia Tech நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த திட்டத்திற்கான யோசனையானது முதியவர்களுக்கும், அங்கவீனமுற்றவர்களுக்கும் என ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள காலணி ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தும்போது சாதாரண படிகளில் ஏறுவதை விடவும் 37 சதவீதம் இலகுவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments