புற்றுநோய்க்கலங்களை அழிக்கக்கூடிய புதிய நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

டென்மார்க்கிலுள்ள Copenhagen பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க் கலங்களை அழிப்பது தொடர்பில் புதிய தொழில்நுட்பம் பற்றி முன்மொழிந்துள்ளார்கள்.

அதாவது புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான கலங்களில் உள்ள DNA புரதத்தினை பிரிதியீடு செய்வதன் ஊடாக அவற்றினை அழிவடையச் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் கலங்களில் DNA பிரதியாக்கம் நடைபெறுவதை PRDX2 எனும் புரதம் மந்த நிலைக்கு இட்டுச் செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.

எனவே இச் செயன்முறையை இரசாயனப் பதார்த்தங்களின் உதவியுடன் துரிதப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் கலங்களை இல்லாது செய்ய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் புற்றுநோய்க் கலங்கள் தற்கொலை செய்யக்கூடிய வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை கண்டறிந்துள்ளதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்