போலியான செய்திகளை கண்டுபிடிக்கும் பேஸ்புக்கின் புதிய தொழிற்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
64Shares
64Shares
lankasrimarket.com

ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதனால் பேஸ்புக் நிறுவனம் உலக அளவில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.

எனினும் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு பல்வேறு வழிகளை கையாள முயற்சி செய்து வந்தது.

இதன்படி தற்போது Fact Checking எனும் முறையினை தென்னாசியாவில் பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளது.

அதிலும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முதன் முறையாக சோதனை நடத்தவுள்ளது.

இச்சோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய மாநிலங்கள், நாடுகள் என இம்முறை விஸ்தரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் போலியான தகவல்கள் பரப்பப்டுவதை 80 சதவீதம் குறைக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்