கர்ப்பிணித்தாய்மார்களே இது குழந்தைகளை பாதிக்கும் என்பது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கர்ப்பம்
100Shares
100Shares
lankasrimarket.com

சிறந்த முறையில் குழந்தைப்பேறு நிகழ்வதற்கு கர்ப்பிணித்தாய்மார்கள் சில வரையறைகளை கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் எவ்வாறு தூங்க வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது முறையற்ற தூக்க முறைகள் குழந்தைப் பேற்றினை பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

Tommy's Stillbirth Research Centre மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ஐக்கிய இராச்சியத்திலுள்ள 41 மகப்பேற்று வைத்தியசாலைகளில் இருந்து 1024 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 291 பெண்கள் குழந்தைப் பேற்றில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எஞ்சிய 733 பேர் சாதாரண முறையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

மகப்பேற்றில் சிக்கலை எதிர்நோக்கிய 291 பெண்களிடமிருந்து பெற்ற தரவுகளின்படி தூங்கும் நிலை(Sleeping Position) காரணமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது நேரான முறையில் தூங்குவதை தவிர்த்து சரிந்த முறையில் தூங்குவது ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்