நடிகர் கமல்ஹாசனின் வாழ்க்கையில் சரிகா

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
1432Shares
1432Shares
lankasrimarket.com

நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே வாணி கணபதி என்ற மனைவி தனக்கு இருந்தபோது, நடிகை சரிகா தாகூரை காதலித்த காரணத்தால் கமலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

தன் வாழ்வில் வலிகளை மட்டுமே கண்டு வந்த சரிகாவின் வாழ்வில் கமலின் காதலும், உறவும் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்பித்தது.

நடிகர் கமல்ஹாசனை போன்று நடிகை சரிகாவும் சிறு வயதிலேயே திரைத்துறையில் காலடி பதித்தவர். ஆனால் இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள்.

சரிகா தனது சிறுவயதில் நடிக்க ஆரம்பித்தபோது அவரின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்தது, படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவரால் தொடர்ந்து தனது படிப்பினை தொடர முடியவில்லை.

சரிகாவின் படிப்பிற்கு அவரது தாயே இடையூறாக இருந்துள்ளார், தனது தாயிடம் அவர் அதிக கொடுமைகளை அனுபவித்த காரணத்தால் அவரை விட்டு பிரிந்து தனியா வசிக்க ஆரம்பித்தார்.

இந்த சமயத்தில் தான் தென் இந்திய சினிமாவில் கலக்கிவந்த கமலுடன் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். ஏனெனில் கமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்புபவர்.

திருமணம் செய்துகொள்ளாமலேயே ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்து பிறகு 1988ல் இருவரும் சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாதுறையை விட்டு சரிகா விலகினார். 1988 ஆம் ஆண்டில் கமலை திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து பெறவிருக்கும் போது சரிகா தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போது பலத்தை காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார் சரிகா.

மேற்கத்திய கலாசார வாழ்க்கையானது லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை விரும்பும் கமல், இந்த சமூகத்தின் காரணத்தால் தான் நான் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் சரிகாவை திருமணம் செய்துகொண்டேன், நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்