உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் டாப் 5 விடயங்கள்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

உண்மையில் நாம் வசிக்கும் இந்த பூமியை அழிக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் எவையெல்லாம் பூமிக்கு ஆபத்தை உண்டாக்கக் கூடியவை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அறிவியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி 4,550,000,000 ஆண்டுகள் பழைய, 5,973,600,000,000,000,000,000 டன் எடை கொண்ட பூமிக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளனர்.

மாறி வரும் பருவநிலை

பூமியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்திருக்கிறது, இதற்கே துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கிவிட்டன.

மனிதர்கள் இதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த 2 டிகிரி, 4 முதல் 6 டிகிரி ஆகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அப்படியானால், அதைப் பூமியால் தாங்க முடியாது, கடல் மட்டம் உயரும்.

உலகம் முழுவதுமே காடுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத போர்

ஹிரோஷிமா, நாகசாகியை மறக்க முடியுமா? இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையையும் அழிக்க அதிக அளவிலான அணு ஆயுதங்கள் தேவை.

அவ்வளவு ஆயுதம் தற்போது உலகில் இல்லை. ஆனாலும், அணு ஆயுதங்கள் உலகை அழிக்க கூடியவை பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஏன் தெரியுமா? அணு ஆயுதங்களால் பூமியின் வெப்பநிலை நொடிப்பொழுதில் குறைந்துவிடும்.

மனிதர்களின் உணவுப்பொருட்கள் எதுவும் அந்தக் குளிரில் உற்பத்தி ஆகாது. அதன் விளைவாக மனித இனம் அழியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சூழியல் பேரழிவு

சூழியல் பேரழிவு என்பது உயிரினங்கள் வாழத்தேவையான சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பூமி இழந்து வருவதுதான். குளோபல் வார்மிங்கில் தொடங்கி இதற்கு பல காரணங்கள் இருக்க கூடும்.

உலக பொருளாதார சரிவு

உலகம் போகும் திசையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் இப்போது இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் பல நாடுகள் திவால் ஆகலாம் என்கிறார்கள்.

அதனால் மக்கள் தொகை குறையும், மக்கள் தொகை பெருகவே பெருகாது எனவும் அஞ்சுகிறார்கள்.

தப்பிப்பிழைக்கும் நாடுகளும் தங்களுக்குள் போரிட்டு மடியலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிறுகோள்களின் தாக்குதல்

Asteroid Impact என்பார்கள், கோள்கள் மோதிகொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், டைனோசர் என்ற இனமே அழிந்து போனதுக்கு அப்போது நடந்த மோதல் தான் காரணம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

எதிர்காலத்தில் அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதனாலும் உலகம் அழியலாம்.

மேல் குறிப்பிட்ட பட்டியலில் எரிமலைகள் தொடங்கி நேனோ டெக்னாலஜி வரை பல விடயங்களைப் பட்டியிலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவை எல்லாமே உலகையோ, மனித இனத்தையோ எதிர்காலத்தில் அழிக்கும் தன்மையுடையவை என்கிறார்கள்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments