மரபணுச் சிகிச்சை மூலம் ஆஸ்துமாவுக்கு தீர்வு: விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவாச நோயாகக் கருதப்படும் ஆஸ்துமா ஆனது நீண்ட நாட்கள் ஒருவரை பாதிக்கவல்லது.

இந்த நோயை முற்றாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் இல்லாத போதிலும் தற்காலிகமான நிவாரணிகள் காணப்படுகின்றன.

advertisement

இது சுவாசப்பையிலுள்ள மூட்டுக் குழாய்களையே அதிகம் பாதிக்கின்றது.

இந்நோயைக் குணப்படுத்துவதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறிருக்கையில் மரபணுச் சிகிச்சை மூலம் ஆஸ்துமா அறிகுறி அல்லது நோயை முற்றாகக் குணப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இந்த தொழில்நுட்பமானது நிலக்கடலை, தேனீ நஞ்சு மற்றும் கடல் வாழ் உயிரினமான மட்டி என்பனவற்றினால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கான சிகிச்சை போன்றே இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சிகிச்சை முறையானது நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட நிர்ப்பீடணத்தொகுதியை தூண்டுவதாகும்.

இதன் மூலம் T வகை கலங்கள் ஆஸ்துமாவிற்கு எதிராக செயற்பட ஆரம்பிக்கும்.

இதற்கான ஆய்வுகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வருகின்றன.

மேலும் அவுஸ்திரேலியாவில் மட்டுமே 2.5 மில்லியன் மக்கள் ஆஸ்துமாக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments