நிலநடுக்கம் வந்தால் மெசேஜ் வரும்: விஞ்ஞானிகளை வியக்க வைத்த தமிழக மாணவன்

Report Print Raju Raju in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்த்தும் கருவியை கண்டுப்பிடித்துள்ள பள்ளி மாணவனின் திறமையை கண்டு விஞ்ஞானிகள் வியந்து போயுள்ளனர்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தனுஷ். அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

உலகெங்கும் ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த செய்திகளை தனுஷ் தொடர்ந்து படித்து வந்துள்ளார்.

இதையடுத்து தனது பள்ளி ஆசிரியை சுஜாதாவிடம் சென்ற தனுஷ், இந்த நிலநடுக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாதா என கேட்டுள்ளார்.

அதற்கு சுஜாதா, இயற்கையின் அதிர்வான நிலநடுக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால், நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரும் ஒரு சிஸ்டத்தை உருவாக்கினால் ஆபத்தை தடுக்கலாம் என கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆசிரியை மூலம் நிலநடுக்கத்தை உணர்த்தும் சீஸ்மோகிராபி கருவியின் செயல்பாடுகளை தனுஷ் தெளிவாக கற்றார்.

ஆறு மாத முயற்சிக்கு பிறகு நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஒரு கருவியை தனுஷ் தானாகவே உருவாக்கியுள்ளார்.

தனுஷ் கூறுகையில், நான் கண்டுப்பிடித்துள்ள கருவி ரிக்டர் அளவுகோலில் ஏற்படும் அதிர்வுகளை ஜிபிஆர்எஸ் சிப் மின்காந்த அலைகளாக மாற்றுகிறது

செல்போன் கோபுரத்தில் இணைக்கப்பட்டுள்ள சிப் மூலமாக நிலநடுக்கம் வருவதை அலர்ட் செய்து குறித்த டவரில் உள்ள செல்போன்களுக்கு மெசேஜ் செல்லும் என கூறியுள்ளார்.

தனுஷின் கண்டுப்பிடிப்பு விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளது.

அறிவியல் கண்காட்சியில் தனது கண்டுப்பிடிப்புக்காக பரிசு வாங்கியுள்ள தனுஷுக்கு எதிர்காலத்தில் விஞ்ஞானியாகி இயற்கை சீற்றங்களை கண்டறியும் கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்