புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த அதிர்ச்சி தகவலை அவசியம் தெரியப்படுத்துங்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
124Shares
124Shares
lankasrimarket.com

புகைப்பிடித்தல் என்பதே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்பாடு தான்.

இதில் புகைப்பிடித்தலின் அளவை குறைப்பதன் ஊடாக தீங்குகளில் இருந்து விடுபட முடியும் என்று எண்ணுவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு ஒரு சிகரட் வீதம் புகைத்தாலே அது இருதய நோய்களை உண்டாக்குவதுடன் மாரடைப்பினையும் ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் BMJ அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது ஆகக் குறைந்தது ஒரு சிகரட்டினை புகைப்பதனால் கூட இருதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பு சாதாரண மனிதர்களை விடவும் 50 சதவீதமும், மாரடைப்பு உண்டாவற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாகவும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதுமட்டுமன்றி புகைப்பதன் ஊடாக புற்றுநோய்க்கு ஆளாகி மரணமாகின்றவர்கள் தவிர இருதய நோய்களால் திடீரென மரணமாகின்றவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக இருப்பதனையும் புள்ளிவிபரப்படுத்தியுள்ளனர்.

எனவே பாதுகாப்பாக புகைக்கக்கூடிய அளவு என்று ஒரு வரையறையும் இல்லை என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்