பெருங்குடல் புற்றுநோய் தொடர்பில் ஆறுதல் தரும் தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

தொடர்ச்சியாக தானியங்களை உணவாக உட்கொள்பவர்களை பெருங்குடல் புற்றுநோய் தாக்காது என என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள Yale பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக கடந்த 6 வருடங்களாக சுமார் 826 பேரை ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பெருங்குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

வாரம் தோறும் இவர்களுக்கு ஒன்று தொடக்கம் இரண்டு அவுன்ஸ் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு 42 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது.

எனினும் தானியங்களை உண்பதன் ஊடாக 57 சதவீதம் வரை பெருங்குடல் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்