செய்தி
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012, 11:47.48 PM GMT ]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்காக சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ நாளை பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பார் என்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இத்தெரிவுக் குழுவுக்கான தலைவரும் சபாநாயகரினால் நியமிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 117 ஆளும் தரப்பு எம்.பி.க்களின் கையொப்பத்துடன் கூடிய குற்றப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இதனை விசாரிப்பதற்காக 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட உள்ளதோடு, இதற்காக ஆளும் தரப்பு சார்பாக 7 பேரின் பெயரும், எதிர்த்தரப்பு சார்பாக 4 பேரின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் விபரங்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார்.

பாராளுமன்றம் நாளை காலை 9.30 மணிக்கு கூடும்போது பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணை செய்ய தெரிவுக்குழு நியமிப்பது குறித்து சபாநாயகர் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட உள்ளார் எனவும் அவர் கூறினார்.

மேற்படி தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பு சார்பாக அமைச்சர்களான நிமல் ஸ்ரீபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம் ஜெயந்த், டொக்டர் ராஜித சேனாரத்ன, விமல் வீரவங்ச, டிலான் பெரேரா மற்றும் பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்த்தரப்பு சார்பாக எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜித ஹேரத், ஆர். சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகரினால் நாளை நியமிக்கப்படவுள்ள இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒருமாத காலத்தில் தனது விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார்.

தெரிவுக்குழுவிற்கான தலைவர் நாளை நியமிக்கப்பட்ட பின்னர், அதே தினத்தில் இருந்து தெரிவுக்குழு கூட முடியும் எனவும், அது குறித்து தெரிவுக்குழுத் தலைவர் தீர்மானிப்பார் எனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறுகிற போதும், தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்கு இதனால் எதுவித தடங்கலும் எழாது எனவும், தெரிவுக்குழு விசாரணைகள் புறம்பாகவே இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இறுதியாக பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்படும். பிரதம நீதியரசர் தொடர்பில் ஜனாதிபதியாலே இறுதி முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:34.22 AM ]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:33.09 AM ]

 அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் அதன் கணக்காளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[ Friday, 24-05-2013, 03:32.14 AM ]

டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

[ Friday, 24-05-2013, 03:01.02 AM ]
கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 17:13:15 GMT ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.