பழுதான வாகனம் மீது பயங்கரமாக மோதிய கார்: 8 வயது சிறுமி பலி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் பழுதாகி நின்ற கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Hunzenschwil நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் 26 வயதான தாயார் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் காரில் பயணம் செய்துள்ளார்.

சாலையில் சென்றபோது ஓரிடத்தில் கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது. காரை விட்டு மூவரும் இறங்காமல் அமர்ந்திருந்தபோது அந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாயாரின் காருக்கு பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் பின்பக்கமாக பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் குழந்தைகள், தாயார் என மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய 31 வயதான ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளில் 8 வயதான சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாயாருக்கும் மற்றொரு பிள்ளைக்கும் தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது.

advertisement

பழுதான கார் மீது மோதி சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்