ஒரு குடும்பத்தையே கொன்று வீட்டோடு கொளுத்திய கொடூரன்: நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சவிட்சர்லாந்தில் தாய், இரண்டு மகன்கள் மற்றும் மூத்த மகனின் தோழி என நான்கு பேரையும் கொன்று வீட்டோடு கொளுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் Aargau மாகாணத்தின் Rupperswil பகுதியில் நான்கு பேர் கொல்லப்பட்டு வீட்டோடு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1,00,000 பிராங்குகள் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தனர்.

நீண்ட விசாரணைக்கு பின் சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு 2016 மே மாதம், சம்பவ இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்தில் வசித்து வந்த 34 வயதான தாமஸ் என்ற நபரை பொலிசார் கைது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

லென்ஸ்பர்க் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தாமஸ் நான்கு பேரையும் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று, 48 வயதான தந்தை வெளியே சென்றவுடன் வீட்டிற்குள் நுழைந்த தாமஸ், தாயை மிரட்டி 19 வயது மகன் மற்றும் அவரது 21 வயதான தோழியை கட்டி போட்டு வைத்துள்ளார்.

பின்னர் தாயையும் கட்டி போட்டு 13 வயது மகனை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து, நான்கு பேரையும் கத்தியால் வெட்டிக்கொன்று வீட்டோடு கொளுத்திவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பித்துள்ளார்.

கொலை செய்த கத்தியை காகிதத்தில் மடித்து குப்பை தொட்டியில் வீசியதாக தாமஸ் நீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தாமஸ் இதே பாணியில் மேலும் கொலை செய்யும் திட்டத்துடன் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விரைவில் தாமஸிக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்