சுவிட்சர்லாந்தில் வீட்டின் பால்கனி பெயர்ந்து விழுந்து விபத்து: ஒருவர் படுகாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்தின் Regensdorf பகுதியில் குடியிருப்பின் பால்கனி திடீரென்று பெயர்ந்து விழுந்ததில் 53 வயது நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

சூரிச் மாகாணத்தில் உள்ள Regensdorf பகுதியில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

53 வயது நபர் ஒருவர் தனது குடியிருப்பின் தலைவாயிலில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று முதல் மாடியில் உள்ள பால்கனியானது பெயர்ந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவ உதவியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சம்பவப்பகுதியில் இருந்து அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மட்டுமின்றி சம்பவத்தின்போது அருகாமையில் நின்றிருந்த இருவர் காயமின்றி தப்பியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்