தண்டவாளத்தில் விழுந்து பலியான நபர்: சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் ரயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்து உடல் சிதைந்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Winterthur ரயில் நிலையத்தில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் ரயில் நிலையத்திற்கு வந்த ஒருவர் ரயிலுக்காக காத்திருந்திருந்துள்ளார். சில நிமிடங்களுக்கு பின்னர் ரயில் வந்தபோது திடீரென தண்டவாளத்தில் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நபர் உடல் சிதைந்து பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பயணி ஒருவர் பொலிசாரிடம் சில தகவல்களை அளித்துள்ளார். அப்போது, ‘ரயில் வந்தபோது இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.

ஒருவர் தண்டவாளத்தில் குதிக்க முயற்சி செய்ததும், மற்றொருவர் அவரை தடுக்க போராடி வந்ததையும் தெரிவித்துள்ளார்.

மேலும், நடுத்தர வயதுடைய அந்த நபர் தானாகவே தண்டவாளத்தில் விழுந்ததாகவும் அப்பயணி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்