ஓட்டுநரில்லா பேருந்தின் சோதனை ஓட்டத்தை தொடங்கவுள்ள சுவிஸ் மாகாணம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
208Shares
208Shares
lankasrimarket.com

பிரபலமான சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் ஓட்டுநரில்லா பேருந்தின் சோதனை ஓட்டத்தை தொடங்க தயராகவுள்ளது சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணம்.

நாளை (29-11-2017) தொடங்கவுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படும் பேருந்தில் 11 இருக்கைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை முதல் பயணிகளை ஏற்றிச் செல்லவுள்ள இந்த பேருந்தில் அவசர உதவிகளுக்காக ஒரு நடத்துனர் மட்டும் பயணிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PostBus இன் மஞ்சள் நிறத்தை காண்பிக்கும் இந்த மின்சார வாகனம் fleet-management technology பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. சரியான சாலையில் செல்லவும், அதிகபட்சமாக மணிக்கு 20கி.மீ வேகத்தில் பயணிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

இதேபோல் சியான் பகுதியில் 2016-ல் நடைபெற்ற சோதனையின்போது சிறு விபத்து ஏற்பட்டபோதிலும் மீண்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்