சுவிஸில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வாடகை டாக்சி ஓட்டுனர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
477Shares
477Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வாடகை டாக்சி ஓட்டுனர் ஒருவர் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்வம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

ஜெனீவாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் எத்தியோப்பிய வம்சாவளி வாடகை டாக்சி ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் தாயாருடன் சில மாதங்களாக குறித்த நபருக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் அவரது குடியிருப்புக்கு குறித்த டாக்சி ஓட்டுனர் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் குடியிருப்பில் சிறுமி மட்டும் தனியாக இருந்த ஒரு நாள், குறித்த டாக்சி ஓட்டுனர் சிறுமியை வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் இந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தால், சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அவர்களது படுக்கை அறையின் கட்டிலுக்கு அடியில் சடலத்தை மறைவு செய்துள்ளார்.

இதனிடையே சிறுமியை காணாமல் அவரது தாயார் தேடியுள்ளார். அவருடன் இணைந்து குறித்த டாக்சி ஓட்டுனரும் தேடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு அளித்த புகாரில் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் டாக்சி ஓட்டுனரை கைது செய்தனர்.

ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டையும் குறித்த டாக்சி ஓட்டுனர் மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்