Audi A8 கார்களை முற்பதிவு செய்யும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

ஆடம்பர கார்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Audi நிறுவனம் தனது புதிய காரான Audi A8 இனை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் காரினை கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இதனை எதிர்வரும் ஐந்தாம் திகதியிலிருந்து மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருவேறு என்ஜினை கொண்டதாக வெவ்வேறு வகை Audi A8 அறிமுகம் செய்யப்படுகின்றது.

குறித்த என்ஜின்கள் 3.0 lite TFSI மற்றும் 3.0 litre TDI தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதன் விலையானது 90,600 யூரோக்களாக இருக்கும் அதேவேளை நீண்ட சக்கரத்தினைக் கொண்ட பதிப்பானது 94,100 யூரோக்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்