சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: பெடரர் சாம்பியன்

Report Print Fathima Fathima in ரெனிஸ்
78Shares
78Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் 48வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் போட்டிகள் கடந்த 23ம் திகதி முதல் நடைபெற்று வந்தன.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சுவிசின் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் ஜீவான் மார்டின் டெல் போர்டா மோதினர்.

இதில் முதல் சுற்றை 7-6 என்ற கணக்கில் டெல் போர்டோ கைப்பற்ற சுதாரித்துக் கொண்ட பெடரர் சிறப்பாக விளையாடினார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6- 4, 6- 3 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இது சுவிஸ் உள்ளரங்க டென்னிசில் 8வது பட்டமாகும், இதற்கு முன்பாக 2006, 2007, 2008, 2010, 2011, 2014, 2015ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்