உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி

Report Print Harishan in ரெனிஸ்
62Shares
62Shares
lankasrimarket.com

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவை ஜப்பான் வீராங்கனை வீழ்த்தியுள்ளார்.

உலகின் எட்டு முன்னணி வீரர், வீரங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ளும் உலகின் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்றன.

இதில் பெண்கள் பிரிவின் லீக் போட்டிகளில் அபாரமாக விளையாடியதின் மூலம் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

இந்நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் அகனே யமகுச்சி இருவருக்குமிடையே இன்று நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் செட்டில் 21-15 என்ற புள்ளி கணக்கில் பி.வி.சிந்து எளிதில் வென்றார்.

இரண்டாவது செட்டில் சுதாகரித்துக்கொண்ட ஜப்பான் வீரங்கனை அதிரடி ஆட்டத்தின் மூலம் 21-12 செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.

சேம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி செட்டில் தொடக்கம் முதலே பரபரப்பு தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் 19-19 என்ற கணக்கில் சமநிலை நிலவியது.

இறுதியாக இரண்டு புள்ளிகளை பெற்று 21-19 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சி வெற்றி பெற்றார்.

இந்த தொடரின் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் அக்செல்சன் - மலேசியாவின் சோ வேங் லீ ஆகியோர் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்