லண்டன் தீ விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்த மகாராணி

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களை அந்நாட்டு மகாராணி மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள Grenfell Tower கட்டடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், 76 பேர் வரை காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை 100 வரை

அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகாராணி இரண்டாம் எலிசபெத்தும், இளவரசர் வில்லியம் இன்று நிவாரண மையத்திற்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மகாராணி நேரில் பார்வையிட்டுள்ளார்.

முன்னதாக, வியாழக்கிழமை அன்று தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராணியும் இளவரசரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாறிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ ஆர்வலர்களை மகாராணி வெகுவாக பாராட்டியுள்ளார்.

பிரித்தானிய நாட்டை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ள்து குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments