பிரெக்சிட்டுக்கு எதிராக செயல்படும் அமைப்பிற்கு £400,000 கொடுத்த கோடீஸ்வரர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரெக்சிட்டுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் இயக்கமான Best For Britain என்னும் அமைப்பிற்கு ஆதரவாக 'broke the Bank of England” என்று அழைக்கப்படும் கோடீஸ்வரர் George Soros, £400,000 கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்ட விடயம் பிரெக்சிட்டின் ஆதரவாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

இதனால் ஐரோப்பிய யூனியனை விட்டு பிரித்தானியா வெளியேறும் நிகழ்வில் பின்னடைவு ஏற்படலாம் அல்லது முழுவதுமாகவே நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

பிரெக்சிட்டால் ஏற்படவுள்ள அபாயங்கள் குறித்து மக்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்று முன்னாள் Ukip தலைவரான Nigel Farage தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட் பொருளாதாரத்திற்கு பெரிய அழிவை ஏற்படுத்தும், எனவே பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவதற்கு உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று George Soros முன்பு எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹங்கேரியை பிறப்பிடமாக கொண்ட 87 வயதாகும் George Soros, உலகப் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்,

Best for Britain என்னும் அமைப்பு முன்னாள் மாடலும் இந்நாள் சமூக ஆர்வலருமான Gina Miller என்னும் கோடீஸ்வரப் பெண்மணியால் தொடங்கப்பட்டது ஆகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்