நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்-சின் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ்-சின் புகைப்படத்தை அவரது மகன் ஜார்ஜ் புஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் 1989 முதல் 1993-ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ். அண்மையில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சைபெற்றுவரும் புஷ், தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளதாகவும், நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது மன தைரியத்துடன் இருப்பதாக அவரின் மகனும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments