பயங்கரமாக மோதிக்கொண்ட சரக்கு கப்பல்கள்: பல வீரர்களின் சடலங்கள் மீட்பு

Report Print Vethu Vethu in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜப்பான் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலுடன் மோதி, விபத்தில் சிக்கிய அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து பல வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கே இசு தீபகற்ப பகுதியில் ஏசிஎக்ஸ் கிறிஸ்டல் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

advertisement

அப்போது ஜப்பானின் யோகோசுகாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்டு என்ற போர்க்கப்பலும் நேற்று முன்தினம் அதிகாலை அதே பகுதியில் பயணம் செய்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு கப்பல்களும் பக்கவாட்டில் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் அமெரிக்க போர்க்கப்பலின் வலப்புறத்தில் வாட்டர் லைன் பகுதிக்கு மேலேயும், கீழேயும் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. கடற்படை வீரர்கள் தங்கியிருந்த இரு பகுதியில் கடல் நீர் உள்ளே புகுந்திருந்தது. அங்கு இருந்த வீரர்கள் 7 பேரை காணவில்லை.

24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின், கடற்படை வீரர்கள் சிலரின் உடல்கள், தண்ணீர் நிரம்பிய அறையில் இருந்து மீட்கப்பட்டதாக ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களின் உடல்கள் ஜப்பானின் யோகோசுகா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அடையாளம் காணும் பணி முழுமையடைந்த பிறகே இறந்த வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments