பேஸ்புக் அறிமுகம் செய்த புத்தம் புதிய டூல்: அவசியம் அறிந்து வைத்திருங்கள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பேஸ்புக் சமூகவலைத்தளமானது பயனர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிணங்க Clear History எனும் புதிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதியில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த டூல் பேஸ்புக் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டூலின் உதவியுடன் பேஸ்புக் நிறுவனம் பயனர் ஒருவரின் எந்த தகவல்களை சேகரித்து வைத்துள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

எவ்வாறெனினும் இந்த டூலினை தற்போது சில நாடுகளில் மாத்திரமே அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.

இதன்படி அயர்லாந்து, ஸ்பெயின், தென்கொரியா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பவற்றில் அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்