Google Meet அப்பிளிக்கேஷனில் அதிரடி மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனானா Google Meet இல் அண்மைக்காலமாக புதிய வசதிகள், மாற்றங்கள் என்பன கொண்டுவரப்படுகின்றது.

இந்த வரிசையில் அன்ரோயிட் சாதனங்களுக்கான Google Meet அப்பிளிக்கேஷனில் மற்றுமொரு மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி பயனர் இடைமுகத்தில் (User Interface) இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

எனினும் iOS சாதனங்களில் இந்த மாற்றம் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தற்போது அன்ரோயிட் சாதனங்களிலும் கொண்டுவரப்படவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதத்திலிருந்து வழங்கப்பட்டிருந்த வரையறையற்ற இலவச வீடியோ கொன்பரன்ஸ் அழைப்பு வசதியானது கடந்த மாதம் முதல் 60 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்