வாட்ஸ் ஆப்பில் புதிய விதிமுறைகள்: ஏற்றுக்கொள்ளாதவர்கள் விலகலாம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
34Shares

வாட்ஸ் ஆப் செயலியைப் பற்றி தெரிந்திருக்காத ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களே இருக்க முடியாது.

அந்த அளவிற்கு பிரபலமான குறுஞ்செய்தி செயலியாகும்.

இச் செயலியில் அடுத்த வருடம் முதல் ஒன்லைன் பணப்பரிமாற்ற வசதியும் கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில் தனது இச் செயலியைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் அடுத்த வருடம் மாற்றியமைக்கப்படவுள்ளது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றினை பயனர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமமே வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியும்.

அவ்வாறில்லாவிடில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவதிலிருந்து விலக முடியும்.

அனேகமாக 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என WABetaInfo தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்