பாடகி வீட்டில் சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த திடுக்கீடு

Report Print Basu in ஆசியா

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கரடிக் குட்டியை கடத்தி அடைத்து வைத்திருந்த பாடகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Desa Pandan பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு ஜன்னலில் இருந்து கரடி எட்டிப்பார்க்கும் காணொளி ஒன்று வெளியானது. அது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

கரடியின் அழுகுரலைக் கேட்டுள்ள குடியிருப்பாளர்கள் அதை நேரில் கண்டதும், அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் பாடகியினுடைய வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையின் போது பாடகி, வீட்டில் கரடி குட்டி ஒன்றை கூண்டில் அடைத்து வைத்து வளர்த்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கரடி தொடர்பான எந்த ஆவணங்களும் அந்தப் பெண்ணிடம் இல்லை என்றும், வீட்டில் இருந்த கரடி அழிந்துவரும் இனத்தைச் சேர்ந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரடி பிறந்து 6 மாதமே இருக்கக்கூடுமென அதிகாரிகள் நம்புகின்றனர். அது தற்போது வனவிலங்கு அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 27 வயதான பாடகியிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்