ஆசிய நாடுகளை குப்பைத்தொட்டியாக கருதும் பணக்கார நாடுகள்: இலங்கை உட்பட நாடுகள் கொடுக்கும் சரியான பதிலடி!

Report Print Balamanuvelan in ஆசியா

ஆசிய நாடுகளை குப்பைத்தொட்டி போல் எண்ணி தங்கள் குப்பைகளைக் கொட்டும் பணக்கார நாடுகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றன சில நாடுகள்.

இலங்கை

2 ஆண்டுகளாக கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த பிணவறை மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் அடங்கிய 111 கொள்கலன்களை இலங்கை இம்மாதம் (ஜூலை மாதம்), பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

அந்த கண்டெய்னர்களிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதையடுத்து அவை சட்ட விரோதமாக, மறு சுழற்சிக்காக அனுப்பப்பட்டுள்ள உலோகக் கழிவுகள் என்ற பெயரில் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தோனேஷியா

இந்த மாத இறுதியில் இந்தோனேஷியா, சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏழு கொள்கலன்களை பிரான்சுக்கும் ஹொங்காங்கிற்கு திருப்பி அனுப்பியது. அவற்றில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அபாயகரமான பொருட்கள் இருந்தன.

அதிகாரிகள் மேலும் கழிவுப்பொருட்கள் அடங்கிய 42 கொள்கலன்களை அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனிக்கு திருப்பி அனுப்ப உரிய அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த மாத துவக்கத்தில் 210 தொன்னுக்கும் அதிகமான குப்பையை அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக இந்தோனேஷியா தெரிவித்திருந்தது.

அவற்றில் பிளாஸ்டிக் போத்தல்கள் , மனிதக்கழிவுடன் கூடிய Diaper-கள், மின்னணுக் கழிவுகள் முதலான பொருட்கள் இருந்தன.

ஜூன் மாதம், இந்தோனேஷியா குப்பை அடங்கிய ஐந்து கொள்கலன்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பியது.

மலேசியா

கடந்த மே மாதம், மலேசியா 450 தொன்கள் கிருமிகள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பையை அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்பப்போவதாக அறிவித்தது.

அந்த குப்பை, அவுஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்தது.

வளர்ந்த நாடுகள் தங்கள் குப்பையை எங்கள் நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக அமைச்சர் ஒருவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ்

ஜூன் மாத கடைசியில், பிலிப்பைன்ஸ், தங்கள் நாட்டில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த, 69 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட பல தொன் குப்பையை கனடாவுக்கு திருப்பி அனுப்பியது.

கம்போடியா ஜூலை மாதம், கம்போடியா, கொள்கலன்களில் இருக்கும் 1,600 டன் சட்ட விரோத பிளாஸ்டிக் குப்பையை அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் திருப்பி அனுப்பப் போவதாக தெரிவித்தது.

அவற்றில் 70 கொள்கலன்களில் அமெரிக்காவிலிருந்தும், 13 கனடாவிலிருந்தும் அனுப்பப்பட்டவையாகும்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்